Categories
மாநில செய்திகள்

ஐபேக் தொடர்ந்து கொடுக்கும் ரிப்போர்ட்…. பீதியில் மாவட்ட செயலாளர்கள்… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திமுக பல்வேறு திட்டங்களை வகுத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது. அதில் முக்கியமாகக் ஐபேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. பயணத் திட்டம் பிரச்சார வியூகம் மட்டுமில்லாமல் எந்த தொகுதியில் யாரை நடுதல் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பது வரை ஐபேக் டீம் ஸ்டாலினுக்கு தகவல் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து ஐபேக் உடன் ஒப்பந்தம் செய்தபோதே திமுக முக்கிய புள்ளிகள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர். அதாவது கட்சி நிர்வாகிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஐபேக் டீமுக்கு அதிக அளிக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினர். ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஐபேக் டீம் இருவரது கருத்தை உள்வாங்கி முடிவெடுத்து ஆட்சி அமைத்தார். இதனையடுத்து ஐபேக் இல்லாமலேயே வெற்றி பெற்றிருக்கலாம் தற்போது வெற்றிக்கு அவர்கள் தான் காரணம் என்பது போல் சொல்லப்படுகிறது என்ற பேச்சு திமுகவினர் மத்தியில் நிலவியது.

இந்நிலையில்  ஐபேக் டீமுடன் போடப்பட்ட ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டாலும் அவர்களில் சிலர் இன்னும் முதல்வர் ஸ்டாலினிடம் சில ரிப்போர்ட்களை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. அதாவது கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு, அமைச்சர்களின் செயல்பாடு ஆகியவை குறித்து ஸ்டாலினுக்கு முக்கியமான இடத்தில் இருந்து ரிப்போர்ட் வந்து விடுகிறது என்றாலும் ஐபேக் டீமில் இடம்பெற்றவர்களையும் அதற்கு பயன்படுத்தி வருகின்றனர். அந்த டீம் வழங்கும் ரிப்போர்ட்டை ஸ்டாலின் தரப்பு மற்ற ரிப்போர்ட்களுடன் ஒப்பிட்டு பார்த்து முடிவு எடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் கட்சி அறிவிப்புக்கு கட்டுப்படாமல் இருந்தவர்கள், தர்மசங்கடத்திற்கு ஆளாகியவர்கள், அவர்களுக்கு துணை நின்றவர்கள் என பலர் குறித்தும் அந்த டீம் ஸ்டாலின் தரப்புக்கு ரிப்போர்ட் வழங்கி உள்ளது.

Categories

Tech |