வாலிபரை கொலை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மோகன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மோகனின் சகோதரனான செந்தில் என்பவர் மோகனை பார்ப்பதற்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் மோகன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தில் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி கமிஷனர் தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பிரபுஎன்பவர் ஜெயக்குமார் என்பவருடன் சேர்ந்து குடித்துவிட்டு மோகனின் மனைவியை பற்றி அவதூறாக பேசியுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆத்திரம் அடைந்த பிரபு , ஜெயக்குமார் ஆகிய 2 பேரும் சேர்ந்து மது பாட்டிலை கொண்டு மோகனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பிரபு, ஜெயக்குமார் ஆகிய பி= 2 இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்.