மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர் தன்னுடைய வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த அந்த பகுதியில் உள்ள ஒருவர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் சோலாப்பூரை சேர்ந்த சூர்யகாந்த் என்பதும் அவர் நாக்பூரில்உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்து ஒரு தற்கொலை கடிதம் ஒன்றை காவல்துறையினர் கண்டறிந்தனர். அதில் “என்ன கடவுள் அழைக்கிறார் எனவே இந்த முடிவை எடுக்கிறேன்” என்று எழுதி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து தற்கொலை செய்த சூர்யகாந்த் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விபத்து மரணமாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.