Categories
உலக செய்திகள்

முடிஞ்சா வாங்க…. இல்லனா வேலைய விட்டு போங்க…. எலான் மஸ்க் தடாலடி…. அதிர்ச்சியில் ஊழியர்கள்….!!!

எலான் மஸ்க்கின் இமெயிலினால் ஊழியர்கள் பதற்றத்தில் இருக்கின்றனர்.

பிரபல டெஸ்லா நிறுவனத்தின் CEO ஊழியர்களுக்கு ஒரு இ-மெயில் அனுப்பியுள்ளார். அதில் டெஸ்லா நிறுவனத்தின் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு நேரடியாக வந்து வேலை பார்க்க வேண்டும். அவர்கள் ஒரு வாரத்திற்கு குறைந்தது 40 மணி நேரமாவது வேலை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். இதில் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து வேலை பார்க்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் சில ஊழியர்களுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் வீட்டில் இருந்து வேலை பார்த்தாலும் கூட ஒரு வாரத்திற்கு குறைந்தது 40 மணிநேரம் வேலை பார்க்க வேண்டும். இதை செய்யாதவர்கள் டெஸ்லா நிறுவனத்திலிருந்து வேலையை ராஜினாமா செய்து கொள்ளலாம். மேலும் எலான் மஸ்க் அனுப்பியுள்ள  இ-மெயிலால் ஊழியர்கள் பதற்றத்தில் இருக்கின்றனர்.

Categories

Tech |