சென்னை கிண்டியில் கவர்னர் ஆர்.என். ரவியை முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது முதல்வர் முக ஸ்டாலின் நிலுவையில் உள்ள பல மசோதாக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 21 சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.என். ரவியிடம் முதல்வர் முக ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவு 2022க்குள் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும் அரசியல் சாசனத்தின் உணர்வையும், தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலை நிறுத்துமாறு முதல்வர் அவரிடம் வலியுறுத்தியுள்ளார் .மேலும் நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்ததற்காக முதல்வர் முக ஸ்டாலின் ஆளுநருக்கு நன்றி தெரிவித்தார்.