தமிழ் வளர்ச்சி துறையின் (2021-2022) -ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில், நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே பேச்சுப்போட்டி நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்க அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2022-2023 ஆம் ஆண்டிற்கு கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நாளை (ஜூன் 3) மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெறுகின்றது. இந்தப் பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு 5 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 3,000 ரூபாய், மூன்றாம் பரிசு 2000 ரூபாய் என்ற வகையில் பரிசுகள் வழங்கப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.