பிரபல நட்சத்திர தம்பதிகள் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஆதி. இவர் நடிகை நிக்கி கல்ராணியை காதலித்து கடந்த மாதம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமண போட்டோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் திருமணமான புதுமண தம்பதிகள் திருமணம் முடிந்த கையோடு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
அங்கு புதுமண தம்பதிகளுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வரும் நிலையில் ரசிகர்கள் திருமணமான கையோடு ஹனிமூனுக்கு செல்லாமல் திருப்பதி கோவிலுக்கு சென்று உள்ளீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் நடிகர் ஆதி தி வாரியர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.