Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தூங்கி விட்டு மீண்டும் வந்து பாடுவார் என்பது போல இருந்தது”…. கேகேவின் நண்பர் உருக்கம்….!!!!!

இசையமைப்பாளர் ஜீத் கங்குலி வருத்தத்துடன் கேகே வின் இறப்பு பற்றி கூறியுள்ளார்.

பிரபல பின்னணி பாடகரான கேகே என கூறப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களுக்கு ஏராளமான பாடல்களை பாடி இருக்கின்றார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் டெல்லியில் வசித்து வந்த மலையாள குடும்பத்தைச் சேர்ந்தவர். ஏ ஆர் ரகுமானுக்கு இவரின் குரல் பிடித்ததால் காதல் தேசம் திரைப்படத்தில் கல்லூரி சாலை, ஹலோ டாக்டர் உள்ளிட்ட பாடல்களை பாடும் வாய்ப்பை தந்தார். இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி கலாச்சார விழாவில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அறைக்கு சென்ற கேகே திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பால் காலமானார்.

இந்நிலையில் கேகே வின் நண்பரான இசையமைப்பாளர் ஜீத் கங்குலி கூறியுள்ளதாவது, என் மனைவியுடன் உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த பொழுது கேகே இறந்துவிட்டதாக எனக்கு போன் வந்தது. உடனே கேகேவின் மேனேஜருக்கு போன் செய்தபோது அவர் தேம்பித் தேம்பி அழுதார். உடனடியாக நான் ஆஸ்பத்திரிக்கு சென்றேன். நான் மருத்துவமனைக்கு செல்லும் முன்னதாகவே அனைத்தும் முடிந்துவிட்டது .நிகழ்ச்சியிலிருந்து ஹோட்டலுக்கு செல்லும்போது ஏசியை அதிகம் வைக்குமாறு டிரைவரிடம் கேட்டுள்ளார் கேகே. ஏசி ஃபுல் ஸ்பீடில் இருக்கின்றது என டிரைவர் கூறியுள்ளார். ஆனால் ரொம்ப சூடாக இருப்பதாகவும் கை, கால் வலிப்பதாகவும் கூறியதாக ஜீத் கங்குலி கூறியுள்ளார்.

ஆஸ்பத்திரியில் கேவின் கையை பிடித்த பொழுது அவர் தூங்கிக் கொண்டிருந்தது போல இருந்தது. நிகழ்ச்சிக்கான உடையில் அவர் படுத்திருந்ததை பார்த்தபொழுது சிறிது நேரம் தூங்கிவிட்டு மீண்டும் வந்து பாடுவார் என்பது போல இருந்தது. ஆனால் வரவில்லை என கூறியுள்ளார். கேகேவை தனக்கு 24 வருடங்களாக தெரியும் எனவும் அவர் திறமையான பாடகர் மட்டுமல்லாமல் நல்ல மனிதரும் கூட எனவும் யாரையும் பற்றி தவறாக பேசியதே இல்லை எனவும் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கின்றது எனவும் ஒத்திகை பார்க்காமல் ஸ்டூடியோவிற்கு வரமாட்டார் எனவும் அர்ப்பணிப்புடன் வேலை செய்தார் எனவும் கூறியுள்ளார்.

 

Categories

Tech |