தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அதனால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு 150- ஐ நெருங்கி உள்ளதால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் 30 என்ற அளவில் பதிவான கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து இன்று ஒரே நாளில் 145 ஆக உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை 59, செங்கல்பட்டு 58 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும் இன்று 63 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.