Categories
உலக செய்திகள்

என்னது…. அடுத்த வைரஸா?…. உலகம் முழுவதும் 550-க்கு மேற்பட்டோருக்கு இந்த பாதிப்பு….ஷாக் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயின் பாதிப்புகள், இதுவரை 30 நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதன்படி இதுவரையில் மொத்தம் 550-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இது குறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளதாவது, திடீரென பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோயின் பாதிப்பு ஏற்படுவதை வைத்து பார்க்கும் போது, கடந்த சில காலமாக கண்டறியப்படாத வகையில் இந்த நோய் பல இடங்களில் பரவி இருக்கக் கூடும். எனவே இது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குரங்கு காய்ச்சல், கொரோனா தொற்று பரவிய அதே பாணியில் பரவவில்லை. ஆகவே கொரோனா ஒழிப்புக்கு பயன்படுத்திய அதே நடவடிக்கைகளை இதற்கும் பயன்படுத்த வேண்டியதில்லை என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் குறிப்பாக கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி மேற்கொண்டு, இந்நோய் பரவாத வகையில் தடுக்க வேண்டும் எனவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே இந்தியாவை பொறுத்தவரை இதுவரையில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை. இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பற்றியும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

Categories

Tech |