Categories
ஈரோடு கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பவானிசாகர் அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த திருநங்கை”…. நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு…!!!!!

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த திருநங்கை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவானந்தா காலனி ராஜா நாயுடு வீதியை சேர்ந்த திருநங்கையான சிங்கராஜா என்கின்ற நவீனா என்பவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அருகே இருக்கும் பகுத்தம்பாளையம் பகுதியில் தனது நண்பரின் வீட்டிற்கு 3 பேருடன் வந்துள்ளார். இவர்கள் நேற்று காலை 10 மணிக்கு எம்ஜிஆர் நகர் அருகே ஓடும் பவானி ஆற்றுக்கு சென்று குளித்து கொண்டிருந்த பொழுது நவீனா ஆற்றின் ஆழமான பகுதியில் சென்று குளித்துள்ளார். அப்போது தண்ணீர் அதிகமாக சென்றதால் நவீன தண்ணீரில் மூழ்க தொடங்கியுள்ளார். இதைப் பார்த்த மற்ற நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு நவீனா உடலை மீட்டார்கள். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் நவீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |