உத்திரப்பிரதேசத்தில் திருமணத்திற்காக படிப்பை கைவிடும்படி குடும்பத்தினர் வற்புறுத்தியதால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் எட்டாவாவில் காசிராம் என்னும் இந்த காலனியை சேர்ந்தவர் பிரியங்கா (வயது19). பிரியங்காவிற்கு உடன்பிறந்த 2 சகோதரர்கள் மற்றும் 4 சகோதரிகள் இருக்கின்றனர். பிரியங்காவின் தந்தை கூலி வேலை செய்து வருகின்றார். பிரியங்கா இந்த வருடம் 12ஆம் வகுப்பு சேர இருக்கின்றார். இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர். இதனையடுத்து பிரியங்கா தனது குடும்பத்தினரிடம் படிப்பை முடிக்க வேண்டும். தனக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை எனவும் பலமுறை தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அதையெல்லாம் கேட்காத அவரது குடும்பத்தினர் பிரியங்காவிற்கு நிச்சயம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து கல்வி கற்க வேண்டும் என்ற தனது கனவுக்கும், திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று குடும்பத்தினரின் தொடர் வற்புறுத்தலுக்கும் இடையே மனம் உடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பிரியங்காவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.