சென்னை கலைவாணர் அரங்கில் வருகிற ஜூன் 3 ஆம் தேதி இன்று முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை இந்த மலர் கண்காட்சி நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் மலர்க்கண்காட்சி முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி இன்றுஅரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் தமிழ்நாடு அரசு புதிய முயற்சியாக மலர் கண்காட்சி நடத்தி வைக்கின்றது.
இந்நிலையில் கருணாநிதி உருவ வடிவில் மலர் அலங்காரம் மற்றும் அதிமுக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் விதமாக இந்த மலர் காட்சி வடிவமைக்கப்படுகின்றது. மேலும் இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு நுழைவு கட்டணமாக மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு 20 ரூபாயும், பெரியவர்களுக்கு 50 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த மலர் கண்காட்சியை கண்டு களிக்கலாம்.