நாளை வெளியாகவுள்ள நிலையில் நாடோடிகள் 2 படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது
நடிகர் சசிக்குமார், நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில், இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவான நாடோடிகள் -2 திரைப்படத்தை தயாரிப்பாளர் நந்தகுமார் தயாரித்துள்ளார்.
நாளை வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு எப்.எம்.பைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதாவது தமிழக புதுச்சேரி உரிமைக்காக தயாரிப்பாளர் நந்தகுமாரிடம் 3.50 கோடி வழங்கிய நிலையில் வேறு நிறுவனம் மூலமாக படத்தை வெளியிட தயாரிப்பாளர் நந்தகுமார் நடவடிக்கைகள் எடுத்து வருவதால்
படத்தின் உரிமை தனக்கே சொந்தமானது என அறிவிக்க வேண்டும் அதுவரை படத்தை வெளியிடு திரையரங்குகளுக்குதடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்காக
தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனு தொடர்பாக பதில் அளிக்க பட தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டு விசாரணை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தார்.