தர்மபுரி மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் நடத்தும் வேலையற்ற ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் இளைஞர் திறன் திருவிழா வரும் இன்று நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ள இளைஞர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட எட்டாம் வகுப்பு முதல் ஐடிஐ, பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை பட்டம் B.E படித்த வேலையில்லா இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.