Categories
Tech

பயனர்களே…! இன்ஸ்டாவின் அட்டகாச அறிமுகம்….வெளியான மாஸ் தகவல்….!!!!

இன்று குழந்தைகளை நன்றாக வளர்ப்பதுடன், கவனமாக பார்த்து கொள்ளும் பொறுப்பு பெற்றொர்களுக்கு தான் உள்ளது. ஏனெனில் சமீபத்திய ஆய்வின்படி, லட்சக்கணக்கான குழந்தைகள் காணாமல் போனதாக தெரிகிறது. மேலும் பிச்சை எடுக்க வைப்பது அல்லது உடல் உறுப்புகளுக்காக என பல காரணங்களுக்காக குழந்தைகளை கடத்துகின்றனர்.

இந்நிலையில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிப்பதற்கான புதிய வசதியை இன்ஸ்டாகிராம் செயலி அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அமைப்புகளுடன் இணைந்து இந்த வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்துகிறது.

மேலும் இது தொடர்பான அறிக்கையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் ஒரு குழந்தை காணாமல் போனால் அப்பகுதியில் இருக்கும் பயனர்களை அலெர்ட் செய்யும் வகையில் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |