Categories
மாநில செய்திகள்

அடடே…! 630 மில்லி தங்கத்தில் கருணாநிதியின் உருவம்…. அசத்திய பொற்கொல்லர்…!!!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை(ஜுன் 3) இன்று தமிழ்நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த பொற்கொல்லர் முத்துக்குமரன் 729 மில்லி தங்கத்தில் 3 செ.மீ உயரம், 3 செ.மீ அகலம் அளவில் கருணாநிதியின் உருவத்தை வடிவமைத்துள்ளார்.

மேலும் 630 மில்லி தங்கத்தில் கருணாநிதியின் உருவத்தையும், 99 மில்லி தங்கத்தில் கலைஞர் என்ற கருப்பு சிவப்பு எழுத்தில் பெயரையும் எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே குறைந்த அளவு தங்கத்தில் இந்திய பாராளுமன்றம், தமிழக சட்டசபை, நடராஜர் கோவில், தாஜ்மஹால் உள்பட பலவற்றை வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |