Categories
தேசிய செய்திகள்

ஊர்க்காவல் படையினருக்கு சம்பள உயர்வு….. இதெல்லாம் ரொம்ப கம்மி….. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

ஊர்க்காவல் படையினருக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் ஊர்காவல் படையினருக்கு மாதம் 9,000 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு நாளைக்கு 300 என்ற கணக்கில் மாதம் 9000 வழங்கப்பட்டு வருகின்றது. சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று ஊர்க்காவல் படையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஊர்க்காவல் படையினருக்கு ஒன்பது ஆயிரம் சம்பளம் வழங்கப்படுவது அப்பட்டமான சுரண்டல் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான உத்தரவில் ஊர்காவல் படையினருக்கு ஒன்பது ஆயிரம் சம்பளம் வழங்குவது அவர்களின் உழைப்பை சுரண்டுவது தவிர வேறொன்றுமில்லை. மற்ற ஊழியர்கள் செய்யும் வேலையை தான் அவர்களும் செய்கிறார்கள். அப்படி இருக்க அவர்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சம்பளம். இந்த 9 ஆயிரம் ரூபாயை வைத்து அவர்கள் எப்படி குடும்பத்தை நடத்தமுடியும்? என்று கேள்வி எழுப்பி உள்ளது. எனவே மாதம் ஒன்பது ஆயிரம் சம்பளம் வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊர்க்காவல் படையினருக்கு மாதம் 9,000 சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் மற்ற காவல் துறையினருக்கு மாதம் 20 ஆயிரம் சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து வழங்கப்படுகிறது. எனவே தங்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று ஊர்க்காவல் படையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Categories

Tech |