“பேஸ்புக்” சமூகஊடகத்தின் தாய் நிறுவனம் மெட்டாவின் தலைமை செயல் அதிகாரி பதவி வகித்தவர் ஷெரில் சாண்ட்பெர்க் ஆவார். ஒரு புத்தொழில் நிறுவனமாக (ஸ்டார்ட் அப்) அந்த நிறுவனத்தைத் துவங்கி அதனை டிஜிட்டல் விளம்பர சாம்ராஜ்யமாக மாற்றுவதில் பக்கபலமாக இருந்தவர் ஷெரில் சாண்ட்பெர்க். முதலாவதாக இவர் கூகுளில் சேர்ந்து 4 வருடகாலம் பணிபுரிந்ததும் உண்டு. இப்போது அவர் மெட்டாவிலிருந்து விலகுவது தொடர்பாக தன் “பேஸ்புக்” பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது “நான் கடந்த 2008 ஆம் வருடம் இப்பணியில் சேர்ந்தபோது இதில் ஒரு 5 ஆண்டுகாலம் பங்களிப்பு செய்வேன் என்று தான் நம்பினேன். 14 வருடங்களுக்கு பின் என் வாழ்வின் புதிய அத்தியாயத்தை எழுதுவதற்கான தருணம் வந்திருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் விளம்பர வருமானத்தில் “டிக்டாக்” போட்டி நிறுவனமாக வந்து கொண்டிருக்கிற தருணத்தில் பேஸ்புக் வருவாய் குறையும் சூழலில் இவரது விலகல் ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இப்பெண் பிரபலத்தின் இடத்திற்கு மெட்டாவின் தலைமை வளர்ச்சி அதிகாரியாகவுள்ள ஜாவியர் ஆலிவன் வருகிறார். ஷெரில் சாண்ட்பெர்க் கணவர் சென்ற 2015-ம் ஆண்டு திடீரென்று இறந்துவிட்டார். இந்த கோடை கோலத்தில் இவர் மறுமணம் செய்துகொண்டார். இவருடைய பதவி விலகல் அறிவிப்பைத் அடுத்து மெட்டாவின் பங்குகள் 4 % அளவுக்கு சரிவை சந்தித்திருப்பதாக தகவல்கள் கூறுகிறது.