Categories
உலக செய்திகள்

‘பாகிஸ்தான் உள்நாட்டுப் போரை நோக்கி செல்லும்’…. இம்ரான்கான் விடுத்த எச்சரிக்கை…. பதிலடி கொடுத்த பிரதமர்….!!!

பாகிஸ்தானில் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியில் இம்ரான்கான் பிரதமராக உயர்ந்தவர். அந்த நாட்டில் எந்த ஒரு பிரதமரும் 5 ஆண்டுகாலம் முழுமையாக பதவியில் தொடர்ந்தது இல்லை என்ற வரலாறு இம்ரான்கானுக்கு சொந்தமானது. அவருடைய ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இதனால் அந்நாட்டில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் பதவி பறிக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற புதிய வரலாறு உருவானது. அதனைத் தொடர்ந்து அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பியுமான ஷபர்ஸ் ஷெரீப், ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி அந்த நாட்டின் புதிய பிரதமர் ஆனார். ஆனால் அங்கு நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று இம்ரான்கான் தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்லாமாபாத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறையால் உயிரிழப்புகளும் நடந்தது. 6 நாட்களில் தேர்தல் தேதியை அறிவிக்கவிட்டால் இஸ்லாமாபாத்தை முற்றுகையிட்டு மீண்டும் பேரணி நடத்துவோம் என்று அவர் மிரட்டலும் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் இம்ரான்கான் ‘போல் நியூஸ்’ செய்தி நேற்று முன்தினம் இரவு சிறப்பு பேட்டி அளித்தனர். அப்போது அவர் கூறியது, அரசு எதிர்பார்ப்புகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான எங்கள் கட்சியின் வழக்கு மீது சுப்ரீம் கோர்ட் முடிவுக்காக காத்திருக்கிறோம். அதன்பிறகு நாடாளுமன்ற தேர்தல் நடத்த கோரி அடுத்த கட்ட பேரணி தேதி வெளியிடப்படும். சட்டம் மற்றும் அரசியல் சாசன வழிகளில் நாம் தேர்தலை சந்திக்க அவர்கள் அனுமதிக்கிறாற்கள என பார்ப்போம். இல்லையென்றால் இந்த நாடு உள்நாட்டு போரை நோக்கி செல்லும். நான் நாடாளுமன்றத்துக்கு திரும்பும் பேச்சுக்கே இடமில்லை. ஏனென்றால் அது அரசை அகற்றிய சதியைக் எற்றுகொள்வதற்காக அமைந்துவிடும். மேலும் பாகிஸ்தான் அரசு சரியான முடிவுகள் எடுக்க வேண்டும். பாகிஸ்தான் அணுசக்தி தடுப்பை இழந்தால் நாடு மூன்று துண்டாகி விடும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து இம்ரான்கானுக்கு பதிலடி கொடுத்து பிரதமர் நவாஸ் ஷெரீப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “நான் துருக்கியில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறபோது இம்ரான்கான் நாட்டுக்கு எதிராக அச்சுறுத்தல்களை விடுகிறார். அவர் அரசு பதவிக்கு தகுதியானவர் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் தேவைப்பட்டால் அவரது சமீபத்திய பேட்டி போதுமானது. உங்கள் அரசியலை செய்யுங்கள், ஆனால் எல்லைகளை மீறி பாகிஸ்தானை பிரிப்பது பற்றி பேச வேண்டாம்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |