நகரங்களின் தூய்மைக்காக மக்கள் தூய்மை இயக்கத்தை முதல்வர் முக ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்துள்ளார். இதற்காக சென்னை தங்க சாலையில் அமைச்சர்களுடன் பதாகைகளை ஏந்தியபடி பேரணி சென்ற முதல்வர் முக ஸ்டாலின், பொதுமக்களை சந்தித்து துண்டுப் பிரசாரங்களை வழங்கினார். மேலும் தூய்மை இயக்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் நகரங்களில் மக்கள் கூடும் இடங்களில் மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தூய்மை பணிகள், விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Categories