சோனியா காந்தியை தொடர்ந்து பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு நேற்று கொரோனா உறுதியான நிலையில், பிரியங்கா காந்திக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் வீட்டிலேயே தனிமை படுத்திக்கொண்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.