Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. 10 ரயில் நிலையங்களில்….. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. !!!

இந்திய ரயில்வே தனியார் பங்களிப்போடு ரயில் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. அதாவது ஓய்வு அறை, லிஃப்ட் வசதி, எஸ்கலேட்டர் வசதி, சிசிடிவி கேமராக்கள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன. அதனை போல பயணிகள் அதிகமாக வந்து செல்லும் ரயில் நிலையங்கள் அவசரகால இலவச மருத்துவ உதவி மையங்களை தெற்கு ரயில்வே அமைத்து வருகிறது. தற்போது சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட சில முக்கிய ரயில் நிலையங்களில் மட்டுமே இலவச மருத்துவ உதவி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் முதலுதவி அளிக்க தேவையான மருந்துகளும் சிகிச்சை முறைகளும் உள்ளன. இங்கு ஒரு மருத்துவரும் இரண்டு செவிலியர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த மருத்துவ மையங்களை மேலும் முக்கிய ரயில் நிலையங்களில் விரிவுபடுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அவசரகால மருத்துவ வசதி பெற மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட 10 ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ உதவி மையம் திறப்பதற்கான பணியை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு திடீரென ஏற்படும் காயம், மாரடைப்பு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட சில உபாதைகளுக்கு முதலுதவி தேவைப்படும் என்பதற்காகவும் பயணிகளின் நலனுக்காக இலவச மருத்துவ உதவி மையம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் சில ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளதை போல மதுரை, திண்டுக்கல், ராமேஸ்வரம், தூத்துக்குடி, கோவில்பட்டி, தென்காசி, திருச்செந்தூர், காரைக்குடி, பழனி, விருதுநகர் ஆகிய 10 ரயில் நிலையங்களிலும் அமைக்க பணி ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் மருத்துவமனைகள் சார்பில் இந்த மையங்கள் அமைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |