ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பயிற்சிக்குப் பின் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும். மேலும் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜூன் 14ஆம் தேதி மாணவர் சேர்க்கை பேரணியை ஆசிரியர்கள் நடத்த வேண்டும். கூடுதலாக மாணவர்களைச் சேர்த்தால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு மே மாதம் 14ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் நேற்று கோடை விடுமுறை ஜூன் 5 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வரும் 6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் எண்ணும் எழுதும் பயிற்சி தேர்வில் பங்கேற்கும் படி கல்வித் திட்ட இயக்குனர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.