தமிழகத்தில் இரண்டு வருடங்களுக்கு பிறகு மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்பட்டு தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். நடந்து முடிந்த பொதுத் தேர்வில் 10,11,12 ஆம் வகுப்புகளில் 7,49,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. சரியாக 4.6 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை. 10,11,12 ஆம் வகுப்புகளில் தேர்வு எழுத மொத்தமாக பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 27,30,000. ஆனால் இதில் 6,49,467 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.
இந்நிலையில் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு துணைத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வித் துறை அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் மறு வாய்ப்பு வழங்கும் விதமாக ஜூலை மாதம் துணை தேர்வு நடத்த அரசு தேர்வுகள் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இது மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.