Categories
மாநில செய்திகள்

நாளை (ஜூன் 4) இந்த பகுதியில் எல்லாம் கரண்ட் இருக்காது…. உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த நாளில் குறிப்பிட்ட பகுதியில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். அதன்படி நாளை சிவகங்கையில் கல்லல், காளையார் கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதன்காரணமாக அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

அவ்வகையில் காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் சுற்றியுள்ள பகுதிகளான காளையார்கோவில், சொர்ணவல்லி நகர், பள்ளி தம்மம், புலியடி தம்மம், சருகணி, மேபல், கொல்லங்குடி, கல்லத்தி, கருங்காலி, கருமந்தங்குடி, பெரிய கண்ணனூர், ஒய்யவந்தான், நாட்டரசன் கோட்டை, பொன்னணி கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு மதியம் 2 மணிக்கு மேல் மின் வினியோகம் செய்யப்படும்.

அதனைப் போலவே சிவகங்கையில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளான சிவகங்கை பெருமாள் கோவில், கொட்டகுடி தெரு, மேல ரத தெரு, காந்தி வீதி, மரக் கடை வீதி, சாஸ்திரி தெரு, ராம்நகர், வேலூர் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |