சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் தெலுங்கு காலனியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரசாந்தி என்ற மனைவியும், ஏஞ்சல்(12) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் ஏஞ்சல் அப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி டி.வியை அதிக சத்தமாக வைத்து பார்த்து கொண்டிருந்தார்.
இதனை பிரசாந்தி கண்டித்ததால் மன உளைச்சலில் இருந்த ஏஞ்சல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.