தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அத்திப்பாளையம் பிரிவு பாலாஜி நகரில் ரகுராம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி(60) என்ற மனைவி உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி நடைப்பயிற்சிக்கு சென்ற மூதாட்டியிடம் இருந்து 2 மர்ம நபர்கள் 13 சவரன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து ராணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற குற்றத்திற்காக ஹைருல்லா மற்றும் சக்தி வசந்த் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.