ரேஷன் பொருட்களுடன் தலைகுப்புற கவிழ்ந்த லாரியை மீட்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை தாழ்தொரடிப்பட்டு கிராமத்தில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இந்த ரேஷன் கடைக்கு 18 டன் ரேஷன் பொருட்களை ஏற்றிக்கொண்டு சின்னசேலம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரி கோமுகி அணை அருகில் வளைவில் திரும்ப முயன்றது.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.