Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி சொன்ன ”நன்றி”…. இப்படி ஒரு விசுவாசமா ? மனம் குளிர்ந்த பாஜக தலைகள் …!!

மாநிலங்களவை அதிமுக உறுப்பினர்களாக  முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்,  முதுகுளத்தூர் ஒன்றிய கழக செயலாளர் தர்மர் தேர்வு  செய்வுபட்டுள்ளார்கள். அதற்கான வெற்றி சான்றிதழை தேர்தல் அலுவலரிடம் இருந்து பெற்றனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி,  பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அருள் ஆசியோடு,  இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்  அருள் ஆசியோடு அனைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை அறிவிக்கப்பட்ட ராஜ சபா இரு வேட்பாளர்கள்,

முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட கழக செயலாளர்கள் சிவி சண்முகம் அவர்களும்,  முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் அருமை சகோதரர் தர்மர் அவர்களும் இன்றைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். அதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாகவும்,  எனது சார்பாகவும்,  அண்ணன் ஓபிஎஸ் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேபோல இவர்களுடைய வெற்றிக்கு துணைநின்ற கழகத்தினுடைய சட்டமன்ற உறுப்பினர்களுக்கும்,  அதோடு பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அதனுடைய தலைவர் அய்யா அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் உடைய தலைவர்-  மேலவை உறுப்பினர் முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய சகோதரர்கள் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பாரத பிரதமர் அவர்களுக்கும்,

தேசிய தலைவர் நாட்டா அவர்களுக்கும்,  அதோடு உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கும்,  தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சி  தலைவர் சகோதரர் அண்ணாமலை அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவித்தார். சமீபத்தில் பாஜகவின் வி.பி துரைசாமி அதிமுகவை விமர்சித்திருந்தாலும் கூட எடப்பாடி பழனிசாமி அதையெல்லாம் மனதில் வைக்காமல் பிரதமர், தேசிய தலைவர், உள்துறை அமைச்சர், தமிழக தலைவர் என நன்றி கூறியது பாஜகவினரை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |