Categories
மாநில செய்திகள்

மாமியாரின் வரதட்சணை கொடுமை….. மனைவியை சித்திரவதை செய்து கட்டாய கருக்கலைப்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…. !!!

கடலூர் மாவட்டம் வேம்பூர் அருகில் சிறு பாக்கத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி என்ற மகள் உள்ளார். ஆர்த்திக்கும் பிரேம்குமார் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த மறுநாளே பிரேம்குமார் குடும்பத்தினர் வரதட்சணையாக கொடுக்கப்பட்ட நகைகளின் எடையை கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் ஆர்த்தியின் மாமியார் சுகந்தி எங்கள் பகுதியில் வரதட்சணையாக 40 முதல் 50 பவுன் வரை போடுவார்கள் என்று கூறி அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் சில நாட்களுக்கு கணவன் மனைவி இருவரும் பெங்களூர் சென்று வசித்து வந்தனர்.

இதடையில் ஆர்த்தி கர்ப்பிணியானர். இதனையடுத்து கணவன் பிரேம்குமார் அவரது தாய் சுகந்தி, தந்தை சீனிவாசன், உறவினர்கள் அனுஷா, விஜய் பாபு ஆகியோர் தன் பெற்றோர் வீட்டில் இருந்து கூடுதல் வரதட்சணை வாங்கி வரவேண்டும் என்று சித்திரவதை செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஆர்த்தியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கட்டாய கருக்கலைப்பு செய்து உள்ளனர். இது குறித்து ஆர்த்தி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |