தங்கத்தால் செய்யப்பட்ட கருணாநிதியின் உருவ படத்தை பொது மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் நகை தொழிலாளியான முத்துக்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குறைந்து மில்லி கிராம் நகைகளை பயன்படுத்தி தாஜ்மஹால், தண்ணீர் குழாய், நடராஜர் கோவில் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களை செய்து அசத்தி வருகிறார்.
இந்நிலையில் முத்துக்குமரன் முதலமைச்சரின் தந்தையான கருணாநிதியின் படத்தை முன்னூத்தி அறுபது மில்லி கிராம் தங்கத்தை கொண்டு வடிவமைத்துள்ளார். இந்த உருவப் படம் 3 சென்டிமீட்டர் அகலம் மற்றும் 3 சென்டி மீட்டர் உயரத்தில் உள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்..