Categories
மாநில செய்திகள்

தலைவலி ஸ்டார்ட்…! சென்னையை மிரட்டும் கொரோனா….. மத்திய அரசு பரபரப்பு கடிதம்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால்  தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அடுத்த சில வாரங்கள் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் அவசியம் மற்றும் முக்கியம். கூட்டமான இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணியவும் சமூக இடைவெளியை பின்பற்றவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

மீண்டும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 113 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதில் தலைநகர் சென்னையில் மட்டும் சுமார் 81 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |