பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மூர்த்தீஸ்வரம் நடுத்தெருவில் ராமர் பாண்டியன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ராமர் பாண்டியனின் பெட்டிக்கடையில் காவல்துறையினர் திடீரென சோதனை நடத்தியுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ராமர்பாண்டியன் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து 3 கிலோ 900 கிராம் புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமர்பாண்டியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.