திருவையாறு அருகே உள்ள கோவில் குளத்தின் கரையை ஆக்கிரமித்திருந்த குடியிருப்புகளை அதிகாரிகள் அகற்றினார்கள்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு அடுத்திருக்கும் கண்டியூரில் ஹரசாப விமோசன பெருமாள் கோவில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமாக உள்ளது. இந்த கோவில் குளத்தின் கரையை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி இருந்த நிலையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தஞ்சை ஆட்சியர் தினேஷ் அவர்களின் அறிவுறுத்தலின்படி தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை நேற்று அகற்றினார்கள்.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. நிகழ்வின்போது திருவையாறு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.