தனுசு ராசி அன்பர்களே, இன்று மனதில் கூடுதல் தைரியம் ஏற்படும், எதிர்ப்புகளை சாதுர்யமாக வெள்வீர்கள், தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி ரொம்ப சிறப்பாக நடைபெறும், நிலுவை பணமும் வசூலாகும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள், இன்று சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை மற்றும் ஏற்படும். மிகவும் வேண்டியவர் பிரிய வேண்டியிருக்கும்.
மற்றவர்களுக்கு வழிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும். உதவிகள் செய்யும் போது ரொம்ப கவனமாக செய்யுங்கள், சரியான ஆட்களை தேர்ந்தெடுத்து செய்யுங்கள், அது மட்டுமில்லாமல் வெளியூர் பயணம் செல்லும் பொழுது உடைமைகள் மீது ரொம்ப கவனமாக இருங்கள். வாகனத்தில் செல்லும்போதும் ரொம்ப கவனமாக செல்லுங்கள், பொறுமையை மட்டும் கடைபிடியுங்கள்.
இன்று புதிய வாகனம் வாங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கும், இடம் மாற்றம் பற்றிய சிந்தனையும் மேலோங்கும். இன்று காதல் கை கூடும, திருமணப் பேச்சுவார்த்தை ரொம்ப சிறப்பாக தான் இன்று நடக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித தடையும் இல்லாமல், நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் இவர்களுக்கு கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டத்தை கொடுக்க கூடிய அளவில் தான் இருக்கும். அது மட்டுமில்லாமல் வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்ன தானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட்டமான திசை:வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை