Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! பணிச்சுமை அதிகரிக்கும்..! கவனம் தேவை..!!

மகரம் ராசி அன்பர்களே…!
இன்று முன்னேற்றத்திற்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

அலுவலக பணிகளில் ஏற்பட்ட தொல்லைகள் அனைத்தும் விலகும். கடுமையான பணிச்சுமைக்கு இன்று நீங்கள் முற்றுப்புள்ளி வைப்பீர்கள். உங்களின் பணியை மற்றவர்கள் செய்யகூடும், அது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நேர்மை படுத்துவீர்கள். பிள்ளைகள் எவ்வாறு படிக்கிறார்கள் என்று அவ்வப்போது சோதித்துக் கொள்வீர்கள்.
பிள்ளைகளுக்கு தேவையான தையும் செய்து கொடுப்பீர்கள். பிள்ளைகளின் கல்விக்காக சிறிது செலவு செய்யும் சூழ்நிலையையும் இன்று ஏற்படும்.
நீண்ட நாளைய நண்பர்களின் சந்திப்பு உங்களுக்கு இன்று கிட்டும். இது வாலிப நண்பர்களின் சந்திப்பு இன்று ஏற்படும். இன்று நீங்கள் யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம் முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது.

இன்று உங்களுடைய நல்ல எண்ணங்களுக்கு முயற்சிகள் நன்றாகவே நடக்கும்.
கடின உழைப்பும் நேர்மையான எண்ணங்களும் உங்களுக்கு வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவும். மனம் தைரியம் இன்று அதிகரிக்கும். மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் இன்று கண்டிப்பாக உங்கள் இல்லத்தில் நடக்கும். சுபகாரிய பேச்சுகள் நல்லபடியாக நடந்து உங்கள் இல்லத்தில் திருமணம் கைகூடும். வெகுநாட்கள் வரன்கள் கிடைக்காதவர்களுக்கு கூட நல்ல வரன் கிட்டும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம் ஆகும். இன்று உங்களுக்கு கனவு தொல்லையும் இருக்கும். எதை பற்றிய சிந்தனையும் உங்களுக்கு இருந்துகொண்டேதான் இருக்கும்.
நீங்கள் எதைப் பற்றியும் சிந்தித்து கொள்ளாமல் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.
கணவன் மனைவி இருவருக்கும் பெரிய அளவில் பிரச்சினை எதுவும் இல்லை.
ஆனால் நீங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது மிகவும் சிறந்தது. காதலில் அவர்களுக்கு காதல் கைகூடும். மாணவ மாணவியருக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நீங்கள் படித்த பாடத்தை படித்தபின் எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது. இந்த சனிக்கிழமை என்பதால் நீங்கள் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு வைத்தால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை செய்யும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது.

அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |