மகரம் ராசி அன்பர்களே, இன்று உறவினரின் பேச்சை தொந்தரவாக நீங்கள் கருதுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றம் பெற புதிய வழிகளை சிந்திப்பீர்கள், கூடுதல் உழைப்பினால் பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்னைகள் கொஞ்சம் ஏற்பட கூடும். அதிக விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் பயன்படுத்தவும்.
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். கணவன், மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் மாறும். இன்று அன்பு கூடும் அக்கம் பக்கத்தினரின் இன்று ஆதரவு முழுமையாகவே கிடைக்கும்.
தெய்வீக சிந்தனை மேலோங்கும். மேலும் சுற்றுலா சென்று வருவதற்கான திட்டம் தீட்டுவீர்கள். பண கடன் மட்டும் யாரிடமும் வாங்காதீர்கள் இதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். புதிய முயற்சிகளை கொஞ்சம் தள்ளிப்போடுவது ரொம்ப நல்லது. இன்று மாணவர்களுக்கு செல்வங்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும் விளையாட்டு துறையிலும் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில்தான் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர்சாதம் அன்ன தானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை