தமிழகத்தில் இரண்டு வருடங்களுக்கு கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் தற்போது தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 145 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத் துறை செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்தும்,இதுதொடர்பாக மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதை வைத்து பார்க்கும்போதும் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தீவிரமாகி, நான்காம் அலை உருவாகி விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் கொரோனா மெல்ல அதிகரித்து வருவதால், கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப் படுமா அல்லது பள்ளிகள் திறப்பு தேதி ஒத்தி வைக்கப்படுமா என்ற அச்சம் கலந்த கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் 13ம் தேதி திறக்கப்படும் என்று சமீபத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது.