Categories
மாநில செய்திகள்

மூதாதையர் காலம் தொட்டே தொடரும் பழக்கம்….ஆச்சரியத்துடன் பார்த்த திருச்சி மக்கள்….!!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ஆர்டி என்ற மலை கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் ஸ்ரீரங்கம் பெருமாளை குலதெய்வமாகக் கொண்டு பரம்பரை பரம்பரையாக வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் காலந்தொட்டே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, அந்த கிராமத்தில் உள்ள மக்கள், தங்கள் மூதாதையரின் பாரம்பரிய மாட்டு வண்டியில் வந்து ஸ்ரீரங்கம் நம்பெருமாளை வழிபட்டுச் செல்வது வழக்கம்.

அதன்படி, அந்த கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோரை அழைத்துக் கொண்டு இரட்டை மாடு பூட்டிய 30-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் வழிபாட்டிற்குத் தேவையான மற்றும் அன்னதானத்திற்கு தேவையான அனைத்து பொருட்களுடன்  ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்தடைந்தனர்.

இதையடுத்து அனைவரும் இணைந்து  மேலூர் சாலையில் உள்ள தோப்பில் தங்கி அன்னதானம் வழங்கினர். அதன் பின்னர் கொள்ளிடம் ஆற்றங்கரையில் முடி காணிக்கை செலுத்திவிட்டு மற்றும் பெருமாளுக்கு காணிக்கையினை வழங்கி, நம்பெருமாளையும் தாயாரையும் வழிபாடு செய்துவிட்டு, மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

இதனை தொடர்ந்து நாளை  தங்களது யாத்திரையை நிறைவு செய்து, பின் மீண்டும் மாட்டு வண்டிகளில் தங்களது ஊர்களுக்கு திரும்புவர். மேலும் கொரானா பெருந்தொற்று காரணமாக கடந்த 2-ஆண்டுகளாக  தடைபட்ட இந்நிகழ்வு. நேற்றைய நாளில் வந்து வழிபாடு செய்தனர். இந்நிலையில் மாட்டுவண்டிகளில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என நகர்ப்புறங்களில் வருகை தந்த கிராம மக்களின் இந்த வருகையினை, திருச்சி ஸ்ரீரங்கம் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு, ரசித்துள்ளர்.

Categories

Tech |