Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. 3 நாட்கள் ரேஷன் கடை இயங்காது?…..!!!!

நாடு முழுவதும் கொரோனா காலகட்டத்தில் ஏராளமான நிதியை செலவிடும் சூழல் ஏற்பட்டது. அதனால் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் கலந்து 2020ஆம் ஆண்டு அகவிலைப்படி உயர்வுவழங்கப்படும் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவதாக அறிவித்தது. இதையடுத்து மத்திய அரசுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அவள விலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அரசு உயர்த்த உத்தரவிட்டது. இருந்தாலும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. அதனால் தங்களுக்கு மகளை விலைப்படி உயர்வு வழங்கப்படவேண்டும் என்ற ரேஷன் கடை ஊழியர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பாக வருகின்ற ஜூன் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது. கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்ற ரேஷன் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் கடந்த 30 ஆண்டுகளாக ஊதியம்,ஓய்வூதியம் மற்றும் பணி வரன்முறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட உள்ளது.

மேலும் 31,சதவீதம் அகவிலைப்படி, தனித்துறை, மோடம் வழங்குதல்,புதிய விற்பனை முனையம் மற்றும் சரியான இடையில் தரமான பொருட்கள் பொட்டலமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஜூன் 7 முதல் 9 வரை மூன்று நாட்கள் தொடர்ந்து மாநிலம் தழுவிய தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த 3 நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |