Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விடுதி மாணவர்களுக்கு… இனி புதிய உணவு…. என்னென்ன முழு பட்டியல் இதோ….!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் திருத்தம் செய்யப்பட்ட பட்டியலின்படி உணவு புதிய உணவு வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த புதிய உணவுகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வழங்கினர். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத் துறையின் கீழ் 1354 விடுதிகள் இயங்கி வருகின்றன.

இந்த விடுதிகளில் மொத்தம் 86 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இவர்களுக்கு காலை, மதியம், இரவு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவுகள் 18 வருடங்களாக மாற்றப்படாமல் இருந்ததையடுத்து தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திங்கள்கிழமை காலை சேமியா கிச்சடி, தக்காளி சட்னி, மதியம் சாதம் சாம்பார், இரண்டு வகை பொரியல், ரசம், மோர், முட்டை. இரவில் சப்பாத்தி குருமா வழங்கப்படும். செவ்வாய்க்கிழமை காலையில் பூரி, மசால் மதியம் காய்கறி பிரியாணி, குருமா, முட்டை. இரவில் இடியாப்பம் குருமா அல்லது காய்கறி கூட்டு. புதன்கிழமை காலை இட்லி, சாம்பார், சட்னி.

மதியம் சாதம் ஆட்டுக்கறி அல்லது கோழி குருமா. இரவில் இடியாப்பம், குருமா. மதியம் தக்காளி சாதம், எலுமிச்சை சாதம் அல்லது தயிர் சாதம், உருளை பொரியல், முட்டை. இரவில் ஊத்தப்பம் சட்னி சாம்பார் அளிக்கப்படும். வெள்ளிக்கிழமை காலை பொங்கல் அல்லது வரகு திணை அரிசி பொங்கல், வடை. மதியம் சாம்பார், காரக்குழம்பு, பொரியல், ரசம், மோர், முட்டை. இரவு கோதுமை தோசை, தக்காளி சட்னி, தேங்காய் சட்னி. சனிக்கிழமை காலை ரவா கிச்சடி, தேங்காய் சட்னி. மதியம் புதினா சாதம், கருவேப்பிலை சாதம், அல்லது கேரட் சாதம், அப்பளம், முட்டை. இரவில் சாதம், சாம்பார், பொரியல், ரசம். ஞாயிற்றுக்கிழமை காலை நவதானிய தோசை, சாம்பார், சட்னி. மதியம் சாதம், முட்டை குருமா, ரசம் மோர் . இரவில் தக்காளி சாதம் சாம்பார் சாதம் அளிக்கப்படும்.

Categories

Tech |