Categories
மாநில செய்திகள்

WOW: இவர்களுக்கு 36 நாட்கள் கால நீட்டிப்பு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்றுக் காலத்தில் திருக்கோவில் ஏலதாரா்களின் வருமான இழப்பைக் கருத்தில் கொண்டு 36 தினங்களுக்கு கால நீட்டிப்பு செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறநிலையத்துறை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் “கொரோனா தொற்று சமயத்தில் வாரஇறுதி நாள்களில் திருக்கோவில்கள் மூடப்பட்டதால் பொதுஏலம், ஒப்பந்தப்புள்ளி தொகை முழுதும் வசூல் செய்யப்பட்டு 36 தினங்கள் கடைகள் திறக்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக உரிமைதாரா்களுக்கு இழப்பு ஏற்பட்டிருந்ததை கருத்தில்கொண்டு 36 நாள்கள் காலநீட்டிப்பு செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் செயல் அலுவலா்கள் ஏலதாரா்களுக்கு உரியஅனுமதி வழங்கி அதன் நகலை மண்டல இணை ஆணையா் அலுவலகத்துக்கும், ஆணையா் அலுவலகத்துக்கும் அனுப்பிட அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தொகை முழுதும் வசூல் செய்யப்பட்ட இனங்களுக்கு மட்டும் காலநீட்டிப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் தொகை முழுதும் வசூல் செய்யப்படாத இனங்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டால் ஏற்படும் இழப்புக்கு தொடா்புடைய அலுவலரே பொறுப்பாக்கப்படுவாா்.

அதுமட்டுமின்றி உரிம இனங்களுக்கு காலநீட்டிப்பு வழங்கப்படும் நாட்கள் போக மீதமுள்ள தினங்களுக்கு திருக்கோவிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை தவிா்க்கும் அடிப்படையில் வழக்கமான பொதுஏலம், ஒப்பந்தப்புள்ளி திறப்புக்கான நடவடிக்கையை மேற்கொள்ளவும், கால நீட்டிப்பு வழங்கப்படும் காலம் முடிந்த மறுநாள் முதலே அந்தந்த உரிமங்களுக்கு அங்கீகரிக்கப்படும் புதிய உரிமைதாரா், உரிமம் ஏற்க தவறாது ஆவன செய்யும் வகையில் உரிய அங்கீகாரம் முன்கூட்டியே பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |