லிப்ட் கேட்டு நடித்து மேடை நடன கலைஞரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற இரண்டு பேரில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை, கோடம்பாக்கத்தில் வசித்து வருபவர் 24 வயதுடைய சரண்ராஜ். இவர் மேடை நடனக் கலைஞர். இவர் சமீபத்தில் நடன நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்று விட்டு சென்னைக்கு திரும்பியுள்ளார். அப்போது சென்னை சென்ட்ரலுக்கு ரயில் வந்து இறங்கிய அவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவருடைய விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அப்போது அவரிடம் வழிமறித்து இரண்டு பேர் லிப்ட் கேட்டு மோட்டார்சைக்கிளில் ஏறினார்கள். இதனையடுத்து எழும்பூர் காந்தி இர்வின் பாலம் வந்தபோது அவர்கள் இருவரும் இறங்கி விட்டு நன்றி சொல்வது போல கூறி திடீரென சரண்ராஜ் பிடித்துக் கீழே தள்ளிவிட்டு சரண்ராஜின் மோட்டார் சைக்கிளை இருவரும் பறித்து விட்டு தப்பித்து சென்று விட்டார்கள்.
இதுகுறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் சரண்ராஜ் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் எழும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சரண்ராஜ் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற புளியந்தோப்பு பகுதியில் வசித்த சசிகுமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சசிகுமாரின் நண்பரான தீனா என்பதை வலைவீசி தேடி வருகின்றனர். இதனையடுத்து சசிகுமாரிடம் இருந்து `மோட்டார் சைக்கிளை மீட்டனர். அறிமுகம் இல்லாத நபர்கள் லிப்ட் கேட்டால் கொடுக்க கூடாது என்று காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.