உக்ரைனிலிருந்து 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 100வது நாட்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டு மக்கள் பாதுகாப்பு தேடி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். பெரும்பாலான மக்கள் போலந்து நாட்டிற்கு அகதிகளாக சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து ருமேனியா, ஹங்கேரி, மால்டோவா மற்றும் ஸ்லோவேகியா ஆகிய நாடுகளுக்கும் உக்ரைன் மக்கள் அகதிகளாக சென்றுள்ளனர்.
குறிப்பாக போலந்து நாட்டில் மட்டும் 36 லட்சம் பேர் அகதிகளாக குடியேறியுள்ளதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் அந்நாட்டின் மக்கள் தொகை கடந்த 3 மாதங்களில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் உக்ரைன் ரஷிய போரின் காரணமாக உக்ரைனிலிருந்து மொத்தம் 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.