இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. அந்த சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும். இதனிடையில் கோடை விடுமுறை நாட்களில் மக்கள் சுற்றுலாத்தலங்களுக்குச் செல்வது வழக்கம். எனினும் மக்கள் சிலருக்கு சுற்றுலாத்தலங்களின் சிறப்பம்சம் பற்றி தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் சுற்றிப்பார்க்க வேண்டிய சுற்றுலாத்தலங்கள் பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.1. ஹுமாயூனின் கல்லறைக்கு அருகே உள்ள “லோதி கார்டன்ஸ்” பசுமையான மரங்கள் மற்றும் கண்ணை கவரும் மலர்களால் நிரம்பி இருக்கும் அழகான தோட்டம் ஆகும். இது ஒரு வரலாற்று தோட்டம் மற்றும் கோடைக்காலத்தில் டெல்லியில் சுற்றிபார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்றாகும்.
2. கைவினைப் பொருட்கள் மீது ஆர்வம் உடையவர்கள் கண்டிப்பாக போகவேண்டிய இடம் “டில்லி ஹாட்” ஆகும். இப்பகுதியில் நாம் அணியக்கூடிய அடிப்படையிலான புடவைகள், சால்வைகள், காலணிகள், ஆடைகள் மற்றும் அணிகலன்கள் ஆகிய கையால் செய்யப்பட்ட அழகிய பொருட்கள் இருக்கின்றன.
3. “இந்தியா கேட்” என்பது முதல் உலகப்போரில் இறந்த 70,000 இந்திய வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 42 மீட்டர் உயரம் உள்ள நினைவுச்சின்னம் ஆகும். இந்த இந்தியா கேட் இரவு நேரத்தில் நீரூற்றுகளால் சூழப்பட்டிருக்கும்போது, பார்ப்பதற்கு அது ஒரு அற்புதமான கண்ணைக் கவரும் காட்சியாக இருக்கும்.