சூப்பர் ஹீரோ என்று அழைக்கப்படும் சாம் என்ற நாய் பூங்காவை தூய்மையாக வைத்திருக்க உதவுகிறது.
சிலி நாட்டில் சாண்டியாகோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பூங்கா ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பூங்காவில் நாய் ஒன்று பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற உதவிசெய்கிறது. இந்த நாயின் பெயர் சாம் ஆகும். இந்த நாய்க்கு ஐந்தரை வயதாகிறது. இந்த நாயின் உரிமையாளர் கோன்சலோ சியாங் பூங்காவுக்கு நடை பயிற்சிக்காக தினமும் சாம் என்ற நாயை அழைத்து வருவது வழக்கம்.
அப்பொழுது அந்த நாய் பூங்காவில் இருக்கும் அனைத்து பிளாஸ்டிக் பாட்டில்கள், முககவசம் மற்றும் கேன்கள் போன்ற குப்பைகளை அகற்றி பூங்காவை தூய்மையாக வைத்திருக்க உதவி செய்கிறது. இதனால் பூங்கா ஊழியர்கள் அந்த நாயை சூப்பர் ஹீரோ என்று அழைக்கின்றார்கள்.