மீன ராசி அன்பர்களே, இன்று போட்டி, பந்தயத்தில் தயவுசெய்து ஈடுபடவேண்டாம். தொழிலில் உள்ள குளறுபடியை நீங்க சரி செய்வதால், ஓரளவுக்கு வளர்ச்சி கிடைக்கும். அத்தியாவசிய செலவுக்கு கொஞ்சம் கடன் பெறுவீர்கள், மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் வேண்டும். இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள்.
கணவன், மனைவிக்கு இடையே நிதானமான போக்கு காணப்படும், பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கு ஏற்றார்போல் செயல்படுவது ரொம்ப நல்லது. மூத்த சகோதரர் உடல்நிலையில் கொஞ்சம் கவனமாக இருங்கள், உங்களுடைய உடல்நிலையிலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள் அது போதும், தயவுசெய்து இரவில் கண்விழித்து இருக்க வேண்டாம்.
இன்று கொடுக்கல், வாங்கலில் எந்தப் பிரச்சினையும் இல்லை, நல்லபடியாகவே செய்யலாம், அது மட்டுமில்லாமல் பண பரிவர்தனையும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உடலில் வசீகர தன்மை கூடும், காதல் வயப்பட கூடிய சூழல் இன்று இருக்கின்றன. திருமண முயற்சிகளை மேற்கொள்ளுங்கள், ரொம்ப சிறப்பானதாக இன்று நடக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும், விளையாட்டு துறையில் ஆர்வம் செல்லும், வெற்றி வாய்ப்புக்கள் ஏற்படும். ஆசியர்களின் முழு பக்க பலம் உங்களுக்கு இருக்கும். சந்தேகம் ஏதும் இருப்பின் ஆசியர்களிடம் நிதானமாகி எழுந்து நின்று கேட்டு கொள்வது அவசியம்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்துக் கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்ன தானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மாற்றும் நீலம்