அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் பெருகி கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெக்சாசில் உள்ள ஒரு பள்ளியில் 18 வயது வாலிபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக அரசு பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று தேசிய துப்பாக்கி வன்முறை விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனால் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை ஆரஞ்சு நிறத்தில் ஒளிரப்பட்டது.
மேலும் அங்குள்ள பல்வேறு அரசு அலுவலகங்களும் ஆரஞ்சு வண்ணத்தில் ஒளிரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் கனடாவைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஹாடியா பெல்டின் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலை நிகழ்த்திய மைக்கேல் வார்ட் என்ற நபர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு கோர்ட்டில் 84 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகு ஹாடியா குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இணைந்து “ஆரஞ்ச் ட்ரீ” என்ற அமைப்பை தொடங்கி துப்பாக்கி வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு முதல்,ஹாடியாவின் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதியன்று அமெரிக்காவில் தேசிய துப்பாக்கி வன்முறை விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.