ஜூலை முதல் சில பொருட்களுக்கு தரச்சான்று கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ரப்பர் மற்றும் பாலி மெட்ரிக் மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் காலணிகளுக்கு 2023 ஆம் ஆண்டு ஜூலை முதல் தரச் சான்று கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஷூ, செருப்பு உள்ளிட்ட 13 வகையான காரணிகளுக்கு ஐஎஸ் தரச் சான்றிதழை மத்திய வர்த்தகத்துறை வகுத்துள்ளது. பிவிசி சாண்டல்களுக்கு IS:6721 : 1972 தரச் சான்றிதழும், ஹவாய் ரப்பர் காலணிகளுக்கு IS: 10702:1992 தரச் சான்றிதழும் கட்டாயமாகிறது. இதேபோல் தூய்மைப் பணியாளர்களுக்கான காலணிகளுக்கு IS: 16994:2008 தரச் சான்றிதழும் கட்டாயமாகிறது.
Categories